செய்திகள் மலேசியா
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
கோலாலம்பூர்:
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த சுமார் 27,000 அந்நிய நாட்டினர் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பட்ட அபராதத்தை மட்டும் கட்டினால் போதும்.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கிய திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது.
திட்டத்தின் மூலம் நாடு திரும்ப விரும்பி விண்ணப்பம் செய்தோர் மொத்தம் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அன்றாடம் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர் 300 முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது அல்லது விசா அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 11:13 am
வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்
April 26, 2026, 10:49 am
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 10:21 am
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
