செய்திகள் கலைகள்
மலேசியத் தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் KALAKRITHI 6.0: டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது
கோலாலம்பூர்:
மலேசியத் தேசிய தற்காப்பு பல்கலைக்கழகமான UPNM இன் கீழ் செயல்பட்டு வரும் பண்பாட்டு, நெறிமுறை கழகத்தின் ஏற்பாட்டில் KALAKRITHI 6.0 நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் 14ஆம் தேதி UPNMஇல் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது
வருடாவருடம் நடைப்பெற்று வரும் இந்த KALAKRITHI கலை நிகழ்ச்சி இம்முறை ஆறாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
பி40 தரப்பில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவவும், கிள்ளான் லாடாங் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவு கரம் நீட்டவும் இந்த கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டு குழு தலைவர் கூறினார்.
இந்த KALAKRITHI 6.0 நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை DEWAN LESTARI 4, BANGUNAN LESTARI, UPNM SUNGAI BESI இல் நடைபெறவுள்ளது
ஆக, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்புக்குமாறு ஏற்பாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நிகழ்ச்சியில் பங்குகொள்ள மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் 20 ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேல் விபரங்களுக்கு KKD.UPNM இன்ஸ்டாகிராம், டிக்டாக் சமூக ஊடகங்களை வலம் வரலாம் என்று KALAKRITHI 6.0இன் இயக்குநர் ரோஹித் சிவா தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
