நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிந்துக்கள் மீது தாக்குதல்: டாக்காவில் இந்திய வெளியுறவு செயலர் கவலை

டாக்கா:  

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உளள் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக கூறி அங்கு சென்றுள்ள இந்திய வெளியறவு செயலர் விகரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.

டாக்கா சென்ற விக்ரம் மிஸ்ரி வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வங்கதேசத்தில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலைியல், இஸ்கான் அமைப்பின் துறவி சின்மயி கிருஷ்ண தாஸை தேசதுரோக வழக்கில் வங்கதேச போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், டாக்கா சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், வெளியுறவுச் செயலர் முகமது ஜாஸிம் உத்தின் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான இந்தியாவின் கவலைகளை நான் தெரிவித்ததாக மிஸ்ரி பின்னர் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset