நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மின்சாரப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

மும்பை:

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர். 

மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அஃப்ரீன் ஷா (வயது19), அனம் ஷேக் (வயது 20), சிவம் கஷ்யப் (வயது 18) கனீஷ் கத்ரி (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தையடுத்து பேருந்து ஓட்டுநர் 50 வயதான சஞ்சய் மோர்  கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். 

ஆனால், பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்களோ ஓட்டுநர் போதையில் இருந்தார். அவரால் பேருந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலவில்லை. அதனாலேயே விபத்து நடந்தது என்று தெரிவித்துள்ளனர். 

பேருந்தை ஆய்வு செய்த ஆய்வாளர் பரத் ஜாதவும் பிரேக் சரியாக இருப்பதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிவதாகக் கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset