செய்திகள் உலகம்
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்
மாஸ்கோ:
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் போராளிப் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
தப்பிச்சென்ற அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத் தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
பைடன் வரவேற்பு:
இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
“அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு.
இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று அதிபர் பைடன் வரவேற்றுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
ஈரான் - அமெரிக்கா மோதல் உச்சம்: வளைகுடா நாடுகளிலுள்ள கல்வி வளாகங்களை விட்டு வெளியேற உத்தரவு
March 28, 2026, 7:28 pm
ஈரான் நடத்திய தாக்குதல்களில் கடந்த இரு வாரங்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: 303 பேர் படுகாயம்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 11:21 am
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
