செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பேரிடர்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஜக்கார்தா:
தொடர் மழையால் ஜக்கார்தாவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பான ‘BNPB’ 105 குடியிருப்பு பகுதியும், 19 சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று தெரிவித்துள்ளது.
ஜக்கார்தா மேற்கு, தெற்கு, கிழக்கு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; வெள்ளநீர் உயரம் 20 செ.மீ. முதல் 170 செ.மீ. வரை பரவி உள்ளது. மேற்கு ஜக்கார்தாவில் 26, தெற்கு ஜக்கார்தாவில் 22, கிழக்கு ஜக்கார்தாவில் 57 குடியிருப்பு பகுதி பாதிக்கப்பட்டுள்ளன.
பின்புலமாக, இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பான்டென் மாவட்ட செராங் ரீஜென்சியில் 160 வீடுகள் பாதிக்கப்பட்டு 489 பேர் பாதிக்கப்பட்டனர்.
மேலும், சுலவேசியா மத்திய பகுதியில் பரிகி மௌடோங் மாவட்டத்தில் 391 வீடுகள், 1,089 பேர் பாதிப்படைந்துள்ளனர். நுசா தெங்காரா பாரில் பீமா மாவட்டத்தில் 527 வீடுகள், இரண்டு பள்ளிகள், மூன்று அரசு அலுவலகங்கள் பாதிக்கப்பட்டு, ஒரு பாலம் சரிந்ததுள்ளது. தெற்கு டாங்கெராங், பான்டென் நகரில் 660 வீடுகள், இரண்டு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் பல பகுதிகளில் கடுமையான காற்றும், கடும் வானிலை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 5:12 pm
அஞ்சல் சேவையைப் பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
March 7, 2026, 4:40 pm
