செய்திகள் உலகம்
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
மேற்கு ஜாவா:
லிமோ, டெபோக், மெருயுங் பகுதியில் சனிக்கிழமை 56 வயதான தனது தாயின் சடலத்தை ஒரு பெண் கண்டெடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
'L' என்ற அந்த பெண், தனது தாயாரான DH சுகாபுமி, மேற்கு ஜாவாவில் உள்ளார் என்று குடும்ப உறுப்பினர்களின் தகவலின் அடிப்படையில் நினைத்திருந்தார்.
அவர் தனது ஆண் நண்பரோடு தன் தாயின் வீட்டிற்கு இரண்டாவது முறையாகச் சென்று அறையைச் சுத்தம் செய்து உடைகள் ஒழுங்கு செய்ய முயன்ற போது சந்தேகம் உருவானது.
உடைகளைப் பிளாஸ்டிக் பையில் வைக்கும்போது மனித கால், உலர்ந்த தோல் உள்ள சடலத்தை அவர்கள் கண்டனர்.
அச்சடலம் உடைகள் மேலே மறைத்து வைக்கப்பட்டிருந்ததோடு துர்நாற்றத்தத்தை மறைக்க காபி தூள் சடலத்தின் மேல் தூவப்பட்டிருப்பது தெரிய வந்தது என போலிசார் தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பபட்டவரின் சில விலைமதிப்புள்ள பொருட்களான ஒரு மோட்டார் சைக்கிள், ஆவணங்கள், சாவிகள், தொலைபேசி ஆகியவை காணாமல் போனதாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
பதிவு செய்யாத திருமணத்தில் பாதிக்கப்பட்டவருடன் வாழ்ந்த கணவரின் மீது விசாரணை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்டவருக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறுகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன என்று சினேரே காவல் துறையின் தலைவர் கோம்போல் சைய்ருல் சாலெக் கூறினார்.
சந்தேகநபரைப் போலிசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 5:36 pm
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்
April 27, 2026, 3:20 pm
5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை
April 27, 2026, 12:12 pm
இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்
April 27, 2026, 12:12 pm
10 மில்லியன் டாலர் இணைய மோசடி: இந்தோனேசிய நபர் தாய்லாந்தில் கைது
April 27, 2026, 10:55 am
அழுத்தம் கொடுத்துக் கொண்டே பேச்சுவார்த்தையா?: அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் கேள்வி
April 27, 2026, 10:36 am
எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: வணிக நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
April 26, 2026, 11:43 am
10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்
April 26, 2026, 10:47 am
ஜப்பானில் பயங்கரம்: மனைவியைக் கொன்று மிருகக்காட்சிசாலையின் எரிமூட்டியில் வீசிய கணவன் கைது
April 25, 2026, 5:04 pm
