நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்

டெஹ்ரான்: 

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய உயர்தலைவர் வாஷிங்டனின் ஒப்புதல் இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பும், ஈரானின் உயர்தலைவர் தேர்வில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஈரான் நாட்டின் புதிய உயர்தலைவராக அயதுல்லாஹ் செய்யத் மொஜ்தபா ஹொசைனி கமேனி அறிவிக்கப்பட்டார்.

அவர் முன்னாள் உயர்தலைவரான அலி காமெனியின் மகன் ஆவார். அலி காமெனி கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா,  இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கொலையின் போது அவர் அருகில் இருந்த மொஜ்தபாவின் மனைவி, பிள்ளைகள் அனைவரும் அமெரிக்க இஸ்ரேல் கூட்டுச் சதியால் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, உயர்தலைவரைத் தேர்வு செய்வது இரானின் முழுமையான உரிமை எனவும், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட அனுமதிக்கப்படாது எனவும் வலியுறுத்தினார்.

மேலும், மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்திற்காக அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்காக டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஈரானில் புதிய தலைவராக யார் வந்தாலும், அவர்கள் இராணுவ நடவடிக்கைகளில் குறியாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அவரும் கொல்லப்படுவார் என்று அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து அறிவித்துள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset