நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் உயிரிழப்பு: அல்லு அர்ஜுனா மீது வழக்கு

ஹைதராபாத்:

ஹைதராபாதில் புஷ்பா2 சிறப்புக் காட்சியைப் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது 13 வயது மகன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய பாதுகாவலர்கள், திரையங்கு நிர்வாகம் மீது ஹைதராபாத் போஸீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. புதன்கிழமை இரவே ஹைதராபாதில் சிறப்புக் காட்சி வெளியானது. திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் அந்த திரையரங்குக்கு வந்தனர்.

அவர்களை பார்க்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றதால் தள்ளமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கின் இரும்பு கேட் சரிந்து, ஏராளமானோர் கீழே விழுந்தனர். பலர் நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset