செய்திகள் மலேசியா
சிலங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்துக்குள் நுழைகின்றன: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா ஆகியன அக்டோபர் 18 ஆம் தேதி தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்குள் நுழைகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
கிளந்தான், பேராக், பினாங்கு, சபா மற்றும் கெடா ஆகியவை ஒரே நாளில் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
"இந்த மாநிலங்கள் வெவ்வேறு கட்டங்களுக்கு நகரும் என்பதால், இதன் மூலம் திங்கட்கிழமை முதல் எந்த ஓரு மாநிலமும் மீட்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இருக்காது" என்று இஸ்மாயில் சப்ரி ஓர் அறிக்கையின்வழி தெளிவுபடுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக 10,000 க்கும் குறைவான தொற்று எண்ணிக்கை இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"அதனுடன் சேர்த்து, நேற்றைய நிலவரப்படி, பெரியவர்களுக்கு தடுப்பூசி விகிதம் முதல் தவணையாக 95 சதவிகிதமும் இரண்டாவது தவணை 91.2 சதவிகிதமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது."
பிரதமர் நாட்டில் பல கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ஒய்விடங்கள் செயல்பட அனுமதிக்கும், இ-ஹெயிலிங் வாகனங்கள் நாளை முதல் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.
வெளிநாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களாகவும், தடுப்பூசி போடாத பயணிகளுக்கு 10 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைப் பொறுத்தவரை, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏழு நாட்கள் மற்றும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
முன்னதாக கட்டாய தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக இருந்தது.
அது தவிர, மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில் உள்ள சைபர் கஃபேக்கள் 80 சதவிகித திறனுடனும், நான்காம் கட்டத்தில் உள்ளவை 100 சதவீதத்திலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
"உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார் பிரதமர்.
தேசிய மீட்புத் திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 4:11 pm
பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்
January 5, 2026, 4:05 pm
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
January 5, 2026, 4:01 pm
இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்
January 5, 2026, 3:56 pm
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
