நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பதிவிடப்பட்ட 1,125 ஆபாச பதிவுகள் நீக்கம்: தியோ நீ சிங்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இவ்வாண்டு பதிவிடப்பட்ட 1,125 ஆபாச பதிவுகள் நீக்கப்பட்டதாகத் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். 

இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை சுமார் 800 குழந்தைகள் தொடர்பான ஆபாசப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.

34-ஆக இருந்த குழந்தைகள் தொடர்பான ஆபாசப் பதிவுகள் இவ்வாண்டு 800-ஆக உயர்ந்துள்ளதாக தியோ நீ சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், 2022-ஆம் ஆண்டில் 186 ஆபாச பதிவுகள் தொடர்பான வழக்குகள் இவ்வாண்டு டிசம்பர் 1-ஆம் தேதி வரை 1,125 ஆக அதிகரித்துள்ளதாக மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், (MCMC) தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு பல்லூடக ஆணையச் சட்டம் 1998-இன் கீழ் வணிக நோக்கங்களுக்காக ஆபாசமான உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகளை விநியோகிப்பவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

இந்தப் பரிந்துரையை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் தியோ கேட்டுக் கொண்டார். 

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset