நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி கொள்கை தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு, தேசிய பொருளாதார நிலை 4.5 முதல் 5.5 விழுக்காடு வரை உயரும்  என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

பொருளாதாரத்தைச் சீர்திருத்துதல், மாற்றத்தை உருவாக்குதல், மக்களுக்கு  நல்வாழ்வை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களை மடானி அரசாங்கத்தின் வரவுச் செலவு திட்டம் ஆதரிப்பதாக அன்வார் விளக்கினார். 

2025-ஆம் ஆண்டுக்கான வழங்கல் சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் கடன் தொகை விழுக்காட்டை 5.5-லிருந்து 5-ஆக குறைக்க அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

2022-ஆம் ஆண்டில் நாட்டின் கடன் தொகை 99.4 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 92.6 பில்லியன் ரிங்கிட்டிற்கு குறைந்துள்ளது. 

2023-ஆம் ஆண்டில் 92.6 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த நாட்டின் கடன் தொகை 2024-ஆம் ஆண்டில் 84.7 பில்லியன் ரிங்கிட்டிற்கு குறைந்துள்ளது. அடுத்தாண்டு இந்தத் தொகை 80 பில்லியனுக்குக் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். 

மடானி அரசாங்கத்தின் ஈராண்டு ஆட்சிக்குப் பின்,  நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து வலுவடைந்து வருவதாக அன்வார் கூறினார்.

- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset