நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமருக்குக் கோவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான ஒப்பந்தம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

சிங்கப்பூர் அரசாங்கத்துடன் டிசம்பர் 9-ஆம் தேதி கையெழுத்திடப்படவிருந்த ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) தொடர்பான ஒப்பந்தம் வரும் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

சிங்கப்பூர் பிரதமருக்கு கோவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நேற்று இரவு, சிங்கப்பூர் பிரதமர் தனக்குக் கோவிட்-19 நோய் தொற்று இருப்பது குறித்துத் தமக்குத் தகவல் தெரிவித்ததாக அன்வார் கூறினார். 

ஆசியான் மற்றும் மலேசியா சிங்கப்பூருடன் நல்லுறவைக் கொண்டுள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் மிகவும் அர்த்தமுள்ளதாகக் கருதப்படுகிறது. 

இது வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

இது ஜொகூர் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த நவம்பர் 28-ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் இடையேயான JS-SEZ கூட்டு ஒப்பந்த வரைவு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இம்மாதம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset