செய்திகள் மலேசியா
பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்வதற்கு தடை
கோலாலம்பூர்:
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்வதற்கு குடி நுழைவுத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இன்று இரவு இந்தோனேசியா ஆச்சேவில் உள்ள வாலி நங்கோரோ ஆச்சேவிடம் இருந்து அமைதி விருது வழங்கப்படுவுள்ள நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
எம்ஏசிசி முன்வைத்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த குடியேற்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எம்ஏசிசியை தொடர்பு கொண்டபோது, புத்ராஜெயாவின் உத்தரவின் பேரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக எம்ஏசிசி தெரிவித்தது.
கடந்த வாரத்திலிருந்து பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை எம்ஏசிசி விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை அதன் தொடர்பாக இராமசாமியை விசாரணைக்கு எம்ஏசிசி அழைக்கவில்லை.
அப்படி இருக்கும்போது எம்ஏசிசி அவரை ஏன் தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது? எம்.ஏ.சி.சி. மட்டுமல்ல, எந்த அதிகாரியும் தம்மை விசாரிக்கத் தயார் என்று ஏற்கனவே பேராசிரியர் இராமசாமி பலமுறை கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பேராசிரியர் இராமசாமியை குறிவைக்க சில நபர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். மடானி அரசை விமர்சிப்பது குற்றமா? அதற்காக குற்றவாளி போல் நடத்தப்படுவதா?
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் , நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் விசாரணை என்ற அடிப்படையில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கான அடிப்படை கூறுகள் என்ன? பேராசிரியர் இராமசாமிக்கு
அமைதி விருதை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாலி நங்கோரோ ஆச்சே அலுவலகம் செய்துள்ளது.
ஆனால் தற்போது எல்லாவற்றையும் இறுதி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய சூழலை மடானி அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.
அதற்காக வாலி நங்கோரோவின் அலுவலகத்திற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளோம்.
இந்த மடானி ஆட்சியில் மலேசிய அரசியல் சர்வாதிகாரமாக மாறி வருவதால் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உரிமை கட்சியின் இடைக்கால தலைவர் சதிஷ் முனியாண்டி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 5:34 pm
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது
December 4, 2024, 4:12 pm