நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய அழகி பட்டத்தை வென்றார் ஆசிரியை தனுசியா

கோத்தா கினாபாலு:

2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய அழகி பட்டத்தை ஆசிரியை தனுசியா ஷெட்டி தட்டிச் சென்றார். 

24 வயதான அவர் மலேசிய அழகி பட்டத்துடன் 50,000 வெள்ளியைப் பரிசாகப் பெற்றுள்ளார். 

இவ்வாண்டுக்கான இரண்டாவது தேசிய அளவிலான மலேசிய அழகி   போட்டி சபா கோத்தா கினாபாலுவிலுள்ள சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று இரவு நடைப்பெற்றது.

கோலாலம்பூரைச் சேர்ந்த 24 வயதான தனுசியா செட்டி  தனது அழகு, அறிவாற்றல், திறன், பேச்சுத்திறன் ஆகியவற்றால் நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தார்.

தொடர்ந்து, இந்த மதிப்புமிக்க நிகழ்ச்சியில் (KDCA) மகளிர் தலைவர் Datuk Joanna Kitingan, சபா சமூக தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நிறுவனர் Datin Jeannette Tambakau, துணைத் தலைவர் Datuk Aminah Ambrose மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோத்தா கினாபாலுவைச் சேர்ந்த சீன-பிலிப்பினாவைச் சேர்ந்த Kelly Eleanor Tseu மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த  Hantze Liow ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்தனர்.

மேலும், அவர் அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து உலகெங்கிலும் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset