நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் முக்கியம்: அடாம் அட்லி

கோலாலம்பூர்: 

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின் முக்கியத்துவத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர் அடாம் அட்லி இன்று எடுத்துரைத்தார். 

மாநில மற்றும் அடிமட்ட அளவில் அமைப்பாளர்கள் தங்கள் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவர்களின் சொந்த அணுகுமுறையை அனுமதிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

உதாரணமாக, திரெங்கானு மாநிலத்தில் பெண் வீராங்கனைகள் அணியும் ஆடைகள் குறித்து அமைச்சகம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. 

இருப்பினும், ஆடைக் குறியீடு வழிகாட்டுதல்கள் விளையாட்டு வீரர்களின் செயல்திறனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அடாம் மேலும் கூறினார்.

அமைச்சகம் எப்போதும் சிறந்த தீர்வைத் தேடுவதாகவும் அத்தகைய பரிந்துரைகள் எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடை விவகாரம் பெரும்பாலும் இணையத் தளத்தில் விவாதத்தைத் தூண்டியது.

- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset