செய்திகள் மலேசியா
தென் கொரியாவிலுள்ள மலேசியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் : வெளியுறவு துறை அமைச்சு
புத்ராஜெயா:
தென் கொரியாவில் வசிக்கும் அல்லது அங்கு வருகை புரியும் மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மலேசிய வெளியுறவு துறை அமைச்சு வலியுறுத்துருகிறது.
மேலும், அங்கு வசிக்கும் மக்க்கள் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் வெளியுறவு துறை அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
நாடு முழுவதும் இராணுவச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து தென் கொரியாவின் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தென் கொரியாவிலுள்ள மலேசியர்கள் தூதரகத்தின் மின்னியல் அகப்பக்கத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படுபவர்களுக்கு, சியோலில் உள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக, தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் புதன்கிழமை அதிகாலை இராணுவச் சட்டத்தை மீட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 5:34 pm
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது
December 4, 2024, 4:12 pm