நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் அவேக்கில் சுத்தம் செய்யும் நடவடிக்கையின் போது நாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது

பெசுட்:

டாராவ்விலுள்ள உள்ள கம்போங் அவேக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது நாகப்பாம்பு கண்டுப்பிடிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 12 தன்னார்வலர்களுடன், கம்போங் அவேக் டாராவ், ஃபெல்டா தெனாங், கம்போங் டாராவ், கம்போங் ஜெரபுன்  உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்காக பெத்தீஸ் காரட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த குழு  தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன. 

காலை 11 மணியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டின் சமையலறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மேசைக்கு அடியிலுள்ள அரிசி கொள்கலனுக்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு ஒன்று தரையில் விழுந்தாக 51 வயதான Fadzil Zabidee Zakaria கூறினார்.

அவர் ஒரு குச்சி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி 1.8 மீட்டர் நீளமுள்ள நாகப்பாம்பை வீட்டிலிருந்து அகற்றுவதற்கு முன்பு பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தினார் என்று அவர் தெரிவித்தார்.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset