நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் நல்லுடலுக்கு துன் மகாதீர் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்

கோலாலம்பூர்:

கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் நல்லுடலுக்கு துன் மகாதீர் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் 6ஆவது கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் அண்மையில் காலமானார்.

வெளிநாட்டில் மரணமடைந்த அவரின் உடல் மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

பிரிக்பீல்ட்ஸில் உள்ள அவரின் பூர்வீக வீட்டில் அவரின் உடல் வைக்கப்பட்டது.

இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அவரின் மனைவி, பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அவரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணனின் மகன் பௌத்த பிக்கு உடையில் நாட்டிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset