நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகாபாலா இப்போது சுதந்திரமாக கட்சி சொத்துக்களை நிர்வகிக்க முடியும்

புத்ராஜெயா:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன், புத்ரா ஜெயா பெடரல் நீதிமன்றத்தில் இறுதிச் சட்டத் தடையை நீக்கியதைத் தொடர்ந்து கட்சியின் சொத்துக்களை நிர்வகிக்க இப்போது முழு சுதந்திரம் பெற்றுள்ளார்.

இன்று, சபா - சரவாக் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லி தலைமையிலான மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழு, முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ்  வழக்கில் தலையீடு செய்ய மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவை ஒருமனதாக நிராகரித்தது.

டான்ஸ்ரீ கேவியஸ் முன்வைத்த நான்கு சட்டக் கேள்விகளும் நீதிமன்றங்கள் சட்டம் 1964 இன் பிரிவு 96 இன் கீழ் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதி டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் கூறினார்.

முன்மொழியப்பட்ட மேல்முறையீட்டில் முதல் முறையாக எழுப்பப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த புதிய சட்ட அல்லது அரசியலமைப்பு கேள்விகள் உள்ளன என்று ஒரு விண்ணப்பதாரர் பெடரல் நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

கட்சி பதிவை ரத்தானவுடன் அதன் பொருளாதார நிறுவனமான பிந்தாங் இராடாட் கீழ் வைத்திருந்த கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விரோதமாக கேவ்ஸ் ஹோல்டிங்ஸுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டத்தோஸ்ரீ மெக்லின் 
டிக்குரூஸ் கடந்த ஜூன் 2020 இல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கட்சிக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளும் பதிவு நீக்கப்பட்ட பிறகு திவால் துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார்.

ஃபெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புகளை டான்ஸ்ரீ கேவியஸ்,அவரது நிறுவனம் சவால் செய்த போதிலும் உறுதிப்படுத்தியது.

கட்சியின் பதிவு நீக்கம் நீக்கப்பட்டதும் டத்தோஸ்ரீ  மெக்லின் டிக்குரூஸ் கம்போங் அத்தாப்பில் உள்ள விஸ்மா பிபிபி, 100,000 யூனிட் பங்குகளை மீண்டும் பிபிபிக்கு மாற்றுவதற்கான உரிமையை தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதி உயர் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டது.

 பின்னர் கட்சி, அதன் நிர்வாகிகள் அந்த இடத்தை கைப்பற்றினர்.

இருப்பினும் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குரூஸ் கடந்த நவம்பர் 17, 2023 அன்று காலமானார் .

இதனைத் தொடர்ந்து டத்தோ டாக்டர் லோகபாலா  இந்த ஆண்டு செப்டம்பரில் பிபிபி கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போது அவரின் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது.

டத்தோ டாக்டர் லோகபாலா, பிபிபி கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கெவின் ஆனந்த ஜெயபால் ஆஜரானார்.

இன்று ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை செவிமெடுக்க பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் உட்பட செயலவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset