நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துத் தொழிலாளிகளுக்கும் 16 நாட்கள் வருடாந்திர விடுப்பு வழங்குவது பொருத்தமானதல்ல: மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கம் தகவல்

பெட்டாலிங் ஜெயா : 

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் பணி கால அவகாசத்தைப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு 16 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு வழங்குவது தொடர்பான முன்மொழிவிற்கு மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்த முன்மொழிவு ஊழியர் மற்றும் முதலாளி இருவருக்கும் பாதகமாக இருக்கும் என்று மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கம் தலைவர் வில்லியம் ங்க கூறினார்.

பல தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளவர்களுக்கு 18 முதல் 21 நாட்கள் விடுப்பு வழங்குகின்றன. 

பொதுவாக, பணியாளர்களுக்குக்  குறைந்தபட்சம் 14 நாட்கள் வருடாந்திர விடுப்பு வழங்கப்படும். அதனை,  18 நாட்களுக்கு நீட்டிக்கலாம். 

வேலைவாய்ப்புச் சட்டம் தற்போது 12 மாதங்களுக்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 8 நாட்கள் வருடாந்திர விடுமுறையை வழங்குகிறது. 

2 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரியும் ஊழியர்களுக்கு 12 நாட்களும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு 16 நாட்கள் வருடாந்திர விடுமுறை வழங்கப்படுகிறது.

- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset