நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானிய விலையில் டிக்கெட் விற்பனை 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது: அந்தோனி லோக்

சிப்பாங்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் டிக்கெட் விற்பனை 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் மானிய விலையில் விற்கப்படும்.

குறிப்பாக 499 ரிங்கிட்டுக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மானிய விலை டிக்கெட் விற்பனை 3 நாட்களில் இருந்து 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபகற்பத்திலிருந்து சபா, சரவாக் இடையேயான விமானங்களுக்கான அடுத்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு இந்த முன்முயற்சி பொருந்தும் என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset