நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காவல் துறை அதிகாரிகளுடன் பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்ட இரு பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு அபராதம்

கோலாலம்பூர்:

கடந்த மாதம் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்ட இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு பெண் பாலியல் தொழிலாளர்களுக்குக் கோலாலம்பூரிலிலுள்ள இரு தனி தனி மஜ்திரேட் நீதிமன்றங்களில் அபராதம் விதிக்கப்பட்டன. 

தாய்லாந்தைச் சேர்ந்த 36 வயதான சியாங்மாய் விலாய்வானுக்கு 1800 வெள்ளி அபராதமும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 33 வயதான ஜுனிதா கெதாரேனுக்கு 1,500 வெள்ளி அபராதமும்  விதிக்கப்பட்டது.

இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நவம்பர் 22-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஜாலான் புடு, டாங் வாங்கியில் உள்ள தனித்தனி தங்கும் விடுதி அறைகளில் இரண்டு பெண்களும்  அக்காவல் அதிகாரிகளுடன் பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 372பி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சட்டம் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுக்கும் வழி வகை செய்யும். 

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset