நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் ஜோ லோவின் வீட்டிற்கு சென்றதில்லை: நஜிப்

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் கியா பெங்கில் உள்ள தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ வீட்டில் நான் கால் வைக்கவில்லை.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இதனை கூறினார்.

இன்று உயர்நீதிமன்றத்தில் தனது தற்காப்பு அறிக்கையை தொடர்ந்த நஜிப்,

பல முன்னாள் 1 எம்டிபி நிர்வாக உறுப்பினர்கள் ஜோ லோவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதனால் 1 எம்டிபியில் தவறு செய்யும் சதியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

1 எம்டிபியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹல்மி போன்ற முக்கிய சாட்சிகள், சில மின்னஞ்சல்கள், தம்மைச் சரிபார்க்கவே இல்லை.

மேலும் ஷாரோல் அஸ்ராலும் ஜோ லோவும்  தனது நல்ல நண்பர்கள். குறிப்பாக முன்னாள் வாடிக்கையாவார்.

இதனால் முன்பை விட இரு மடங்கு சம்பளத்துடன் அவருக்கு பதவி வழங்க ஷாரோல் அனுமதித்தார் என்று நஜிப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset