நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பகாட் அருகே சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது: 19 பணியாளர்கள் உயிர் தப்பினர்

பத்து பகாட்:

நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று பத்து பகாட் அருகில் உள்ள தஞ்சோங் லோபோவிலிருந்து 9.1 கடல் மைல் தொலைவில்  தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பணியாளர்கள் உயிர் தப்பினர்.

சம்பந்தப்பட்ட கப்பல் நேற்று காலை 8.30 மணியளவில் கோத்தா கினபாலுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்ததும் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் (ஏபிஎம்எம்) இரண்டு ரோந்துக் கப்பல்களும், ஒரு மரைன் போலிஸ் குழு படகும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.

இதனை பத்து பகாட் கடல் சார் துறை இயக்குநர் முகமது ஜைனி ஜைனல் அபிடின் கூறினார்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பணியாளர்கள்  இருந்தனர். இதில் ஒருவர் மலேசிய நபராவார். மற்றவர்கள் அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

கப்பலில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset