நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

9 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பேரிடரில் 136,984 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்:

நாட்டின் ஒன்பது மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பேரிடரில் கிட்டத்தட்ட 136,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெய்து வரும் இடைவிடாத கனமழையை தொடர்ந்து 9 மாநிலங்களில் வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி வெள்ளத்தால் கிட்டத்தட்ட 136,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 638 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் ஆக அதிகமாக 85,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26,799 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் 251 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரெங்கானுவில் 38,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,743 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் 272 மையங்களில் தங்கியுள்ளனர்.

இம்மாநிலங்களை தவிர்த்து நெகிரி செம்பிலான், கெடா, பெர்லிஸ், ஜொகூர், பேரா, பகாங், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு பதிவாகியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset