நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ குமரன் நம்பிக்கையின் மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது பெற்றார்: டத்தோஶ்ரீ இக்பால் வழங்கினார்

கோலாலம்பூர்:

நம்பிக்கையின் நடசத்திர விருதளிப்பு விழாவில் டான்ஶ்ரீ குமரனுக்கு மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது வழங்கப்பட்டது.

நம்பிக்கை குழுமத்தின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் இவ்விருதை அவருக்கு வழங்கினார்.

நம்பிக்கை குழுமத்தின் நம்பிக்கை நட்சத்திர விருது விழா 3ஆவது ஆண்டாக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.

700க்கும் மேற்பட்டவர்கள் இம்மாபெருரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் முதல் அங்கமாக தேர்வு குழுவினர் தேர்வு செய்த 19 விருதுகள் வழங்கப்பட்டது.

No photo description available.

டான்ஶ்ரீ குமரன்

இதில் சிறந்த எழுத்தாளர் விருதை நிர்மலாதேவி, சிறந்த நிழற்படக் கலைஞர் விருதை மோகன் ராஜ், சிறந்த செய்தியாளர் விருதை உமாவதி, சிறந்த ஆசிரியர் விருதை கே. பத்மநாதன், சிறந்த தன்முனைப்பு பேச்சாளர் விருதை ரேகோ ராசு, சிறந்த கல்வியாளர் விருதை ரஹீம் முன்னா, சிறந்த சமூக இயக்கம் விருதை தமிழன் உதவும் கரங்கள், சிறந்த வழக்கறிஞர் விருதை யோகேஸ் ஆகியோர் வென்றனர்.

May be an image of 4 people, dais and text

டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா

சிறந்த பெண் வர்த்தகருக்கான விருதை மூக்குத்தி பேலஸ் உரிமையாளர் டத்தின் சித்தி ஆய்ஷா வென்றார்.

சிறந்த மருத்துவர் விருது டாக்டர் முஹம்மத் அஷ்ரஃப், சிறந்த தமிழ்ப்பள்ளி விருது ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளி, சிறந்த மூத்த விளையாட்டாளர் விருது மாரியப்பன் பெருமாள், சிறந்த விளையாட்டாளர் விருது கிஷோனா செல்வதுறை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மலேசியாவின் மிகப் பெரிய இந்தியர் ஜவுளி சின்னத்திற்கான விருது போலிவூட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ரஃபி அதனைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த அரசு சேவையாளர் விருது சபா எம்ஏசிசி தலைவர் டத்தோ கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கலைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது  தோக்கோ சத்யாவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தலைமைத்துவத்திற்கான விருதை பர்கத் குழுமத்தின் தலைவர் டத்தோஶ்ரீ பரகத் அலி வென்றார்.

சேவைத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதை டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா பெற்றார்.

முழு நிகழ்ச்சியையும் விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷும் உள்நாட்டு அறிவிப்பாளர் ரேவதியும் இணைந்து படைத்தனர். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset