செய்திகள் மலேசியா
மலேசிய ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கத் தயாராக உள்ளேன்: நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் ஸ்டன் சிவா
கோலாலம்பூர்:
மலேசிய கலைத் துறையில் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கத் தயாராக உள்ளேன்.
நம்பிக்கை ஸ்டார் ஐகோன் விருதளிப்பு விழாவில் இந்த ஆண்டிற்கான ஆக்சன் ஸ்டார் விருதை வென்ற ஸ்டன் சிவா இதனை கூறினார்.
இந்திய ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளேன். ஆனால் முதல் முறையாக மலேசியாவில் எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் இவ்விருதை வழங்கிய நம்பிக்கை குழுமத்திற்கு எனது நன்றிகள்.
மேலும் தனது வெற்றிக்கு தனது மனைவி முக்கிய காரணம். தான் எந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினாலும் தான் கம்போஸ் செய்த காட்சிகளை முதலில் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் போட்டு காட்டுவதாகவும் அவர்கள் துல்லியமாக காட்சியமைப்பில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவார்கள் என்றும் கூறினார்.
தனக்கு 2 மகன்கள் உள்ளனர் என்றும் மூத்த மகனும் ஸ்டண்ட் இயக்குனராக உள்ளார் என்றும் தற்போது அவர் முருகதாஸ் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.
மற்றொரு மகனும் விரைவில் ஸ்டண்ட் துறையில் கால் பாதிக்க உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் மலேசிய கலைஞர்களை தமிழக படங்களில் பயன்படுத்தியுள்ளதாகவும் இங்கு திறமைமிக்க பலர் இருப்பதாகவும் கூறினார். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கத் தாம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 4:12 pm
இரண்டாம் கட்ட வெள்ள நிலை குறித்துப் பிரதமர் அன்வார் கவலை
December 4, 2024, 4:10 pm
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பதிவிடப்பட்ட 1,125 ஆபாச பதிவுகள் நீக்கம்: தியோ நீ சிங்
December 4, 2024, 4:09 pm
பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது: பிரதமர் அன்வார்
December 4, 2024, 2:23 pm
பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்வதற்கு தடை
December 4, 2024, 12:54 pm
2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய அழகி பட்டத்தை வென்றார் ஆசிரியை தனுசியா
December 4, 2024, 12:39 pm
பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் முக்கியம்: அடாம் அட்லி
December 4, 2024, 12:33 pm