நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் பெற்ற முதல் விருது இதுதான்: மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் நெகிழ்ச்சி 

கோலாலம்பூர்:

நேற்று இரவு கோலாலம்பூர் பேங்க் ராக்யாட் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் நடைபெற்ற நம்பிக்கை நட்சத்திர விருது விழா மக்கள் மனங்களை கவர்ந்ததோடு நீங்கா நினைவுகளை கொண்டு சென்றுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் விருதளிப்பு நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் பிரமிக்க வைத்தது. 

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் நம்பிக்கை நட்சத்திர விருது 2024 விழாவில் உள் நாட்டு கலைஞர்களையும் ஆளுமைகளையும் கௌரவித்ததோடு இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களை கௌரவித்தது அனைவரையும் கவர்ந்தது. 

May be an image of 2 people and text

குறிப்பாக தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை விருது குஷ்பு சுந்தருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நம்பிக்கைக்குரிய அறிமுக நடிகர் விருது நடிகர் ஆனந்துக்கு தரப்பட்டது.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படம் உட்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஸ்டாண்ட் இயக்குனராக பணியாற்றிய ஸ்டன் சிவாவுக்கு 
ஆண்டின் அதிரடி ஐகான் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் சீனாவிலும் கொண்டாடப்பட்டு வரும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதனுக்கு இந்த ஆண்டின் சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது.

நடிகை குஷ்பு பேசும்போது இளம் நடிகைகளை போலவே ஸ்லிம்மாக இருக்கும் ரகசியத்தை வெளிப்படுத்தினார். கோவிட் காலத்தில் வேலைக்காரர்கள் இல்லாத நிலையில் வீட்டு வேலைகளை முழுமையாக இழுத்துபோட்டு செய்ததோடு யோகா போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்ய ஆரம்பித்ததும்தான் தனது  இளமை இரகசியத்திற்கான காரணம் என்று கூறினார்.

May be an image of 2 people and text

ஸ்டன் சிவா பேசும்போது தனது வெற்றிக்கு தனது மனைவி முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். தான் எந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினாலும் தான் கம்போஸ் செய்த காட்சிகளை முதலில் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் போட்டு காட்டுவதாகவும் அவர்கள் துல்லியமாக நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவார்கள் என்றும் கூறினார்.

தனக்கு 2 மகன்கள் உள்ளனர் என்றும் மூத்த மகனும் ஸ்டண்ட் இயக்குனராக உள்ளார் என்றும் தற்போது அவர் முருகதாஸ் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக  பணியாற்றி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

May be an image of 5 people and text

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் பேசும்போது ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஏன் இவ்வளவு இடைவெளி என்று கூறும் போது நல்ல கதை கிடைக்கவேண்டும் என்பதோடு கொஞ்சம் சோம்பேறித்தனமும்தான் என்று நகைச்சுவையுடன் கூறினார். சீனாவில் வெற்றி நடைபோட்டு வரும் மஹாராஜா படம் அங்கு 40,000 திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது என்றார்.

தன் வாழ்நாளில் முதன்முறையாக மலேசியாவுக்கு வந்துள்ளதாகவும், நம்பிக்கை நட்சத்திர விருது தான் பெரும் முதல் விருது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்று தொகுப்பாளர்கள்  ஈரோடு மகேஷும் ரேவதியும் மக்களின் கரகோஷத்திற்கு மத்தியில் கூறினர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset