நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024 நாளை DEWAN TUN ABDUL RAZAK, MENARA BANK RAKYAT கோலாலம்பூரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது 

3ஆவது முறையாக நடத்தப்படும் நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் மொத்தம் 42 விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. அதில் 23 பிரிவுகள் யாவும் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கபடுவதாகும். 

அதுமட்டுமல்லாமல், 19 பிரிவுகள் நீதிபதிகளின் தேர்வின் அடிப்படையில்  சிறப்பு விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது 

மலேசியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் இந்த விருது விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றன. 

மலேசியாவில் மிக பிரம்மாண்டமாகவும் உயர்தர தொழில்நுட்பத்துடனும் நம்பிக்கை நட்சத்திர விருது விழா நடைபெறவுள்ளது. திறமைக்கு அங்கீகாரம் என்ற அடைமொழியுடன் இந்த விருது விழா திறமையாளர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது 

நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024 நிகழ்ச்சியின் அண்மைய செய்திகளைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள நம்பிக்கை ஊடகத்தின் சமூக ஊடகங்களை வலம் வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset