நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை வெள்ளம்: காணாமல் போன மத்ரசா மாணவர்களில் மூவர் சடலமாக மீட்பு

கொழும்பு:

அம்பாறை - காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் மூவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், ஓட்டுனர், உதவியாளர் பயணம் செய்தனர். இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

காணாமல் போன மாணவர்களில் மூவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset