நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கேரள நடிகர்கள் மீதான பாலியல் புகாரை திரும்ப பெற்ற நடிகை

கொச்சி:

கேரளத்தில் நடிகரும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பிற நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த 51 வயது மலையாள நடிகை புகாரை திரும்பப் பெற்றார்.

முதல்வர் பினராயி விஜயன் அரசு பாதுகாப்பு அளிக்க முன்வராததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மலையாளத் திரையுலகில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கையில் தெரிவித்தது. இது மலையாள திரையுலை புரட்டிப் போட்டது.

முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்ளிட்ட பிற  நடிகர்கள் மீது புகார் அளித்த நடிகை திடீர் திருப்பமாக புகாரை திரும்ப பெற்றார். இதற்கு மாநில அரசு தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்காததே காரணம் என்றும்  மனரீதியாக சோர்ந்துவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset