
செய்திகள் கலைகள்
அவதூறாக பகிரப்பட்ட வீடியோக்கள், கற்பனையான பேட்டிகளை நீக்க வேண்டும்: ஏஆர் ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ்
சென்னை:
மனைவியை பிரியும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கும் ஏஆர் ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியர் தங்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர்.
இதுசம்பந்தமாக ஏஆர் ரஹ்மான், தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவு தொடர்பாக சமூக வலைதளங்களில், ஏஆர் ரஹ்மான் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ஏஆர் ரஹ்மான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அவதூறு வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am