நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் விசா இலவசம்: சீனா அறிவிப்பு

கோலாலம்பூர்:

மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் இலவச விசாவை சீனா வழங்கியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் இதனை கூறினார்.

மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் உட்பட தகுதியான 38 நாடுகளுக்கு விசா இல்லாத காலத்தை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக சீனா நீட்டிக்கும்.

இந்த நடவடிக்கை இந்த ஆண்டு நவம்பர் 30 முதல் 2025 இறுதி வரை அமலில் இருக்கும்.

பரிமாற்றத் திட்டங்களுக்காக பார்வையாளர்களுக்கு விசா இல்லாத கால வசதியும் நீட்டிக்கப்படும்.

தற்போதைய விசா இல்லாத அமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, வணிகம், சமூகம், போக்குவரத்து நோக்கங்களுடன் இது கூடுதலாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset