நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை அதிபரிடம் இந்திய ராணுவ தலைமை தளபதி உறுதி

கொழும்பு:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்சவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே சந்தித்து,  அந் நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

4 நாள் பயணமாக நரவணே இலங்கைச் சென்றுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்து இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோரினார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 1,000 பேர் பயிற்சி பெறும் நிலையில், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset