நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் குழந்தைகளுக்கான Nestle NAN பால் மாவின் சில ரகங்கள் விற்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவற்றில் நச்சுணவு அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை யாரும் நோய்வாய்ப்பட்டதாகத் தகவல் இல்லை. 

இருப்பினும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பும் விசாரணை நடத்தும் வேளையில் தடை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

கடந்த இரண்டு நாள்களில் ஐரோப்பிய ஆணையத்தின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பும் அனைத்துலக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டமைப்பும் அந்தப் பால் மாவைக் கடைகளிலிருந்து நீக்கும்படி உத்தரவிட்டன. 

பாதிக்கப்பட்ட ஐந்து ரகங்கள் சுவிட்சர்லந்தில் தயாரிக்கப்பட்டவை: - NAN HA 3 SupremePro, தொகுதி 53030017C1
- NAN HA 2 SupremePro, தொகுதி 51420017C4
- NAN HA 1 SupremePro, தொகுதி 51460017C2
- NAN HA 1 SupremePro, தொகுதி 51470017C1
- NAN HA 3 SupremePro, தொகுதி 53030017B1 அவற்றில் cereulide என்கிற நச்சுப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

அதை உட்கொள்ளும் கைக்குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset