நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள் 

போர்ட்லாந்து: 

அமெரிக்காவின் போர்ட்லந்து (Portland) நகரில் குடிநுழைவு அதிகாரிகள் இருவரைச் சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர்.

மலேசிய நேரப்படி இன்று காலை 6.15 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

மருத்துவமனைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகப் போர்ட்லந்து காவல்துறை கூறியது.

கடந்த இரண்டு நாள்களில் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய இரண்டாம் துப்பாக்கிச்சூடு இதுவாகும்.

முதல் சம்பவம் மலேசிய நேரப்படி ஜனவரி 7ஆம் தேதி இரவு 11 மணிக்கு மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் நடந்தது.

காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் குடிநுழைவு அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

இரண்டாவது சம்பவத்தில் போர்ட்லந்தில் சுடப்பட்ட இருவரும் உயிருடன் இருப்பதாக நகர மன்றத் தலைவர் இலானா பிர்ட்டில் கின்னி (Elana Pirtle-Guiney) தெரிவித்தார்.

போர்ட்லந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இரு சம்பவங்களும் கோபத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும் அமைதி காக்குமாறு போர்ட்லந்து காவல்துறைத் தலைவர் போப் டேய் (Bob Day) மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

விசாரணை நடக்கும்வரை குடிநுழைவு அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு போர்ட்லந்து மேயர் கீத் வில்சன் (Keith Wilson) வலியுறுத்தினார்.

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset