நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும் 

கோலாலம்பூர்: 

நாளை முதல் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்பார்வையின் கீழுள்ள அனைத்து எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை மற்றும் சாத்தியமான திடீர் வெள்ள எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்.

மக்கள், குறிப்பாக கோலாலம்பூர் குடியிருப்பாளர்கள், திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு எதிராக முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்கே இந்த குறிப்பிட்ட நடவடிக்கை செயல்படுத்தப் படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.

இந்த முயற்சிக்கு நாங்கள் மெட்மலேசியா மற்றும் ஜேபிஎஸ் (நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை) ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றோம்.

நாங்கள் முதலில் மெனாரா டிபிகேஎல்லில் உள்ள எல்இடி விளம்பர பலகைகள் மூலம் இந்த நடவடிக்கையை தொடங்குவோம் என்று மக்களவையில் வாய்வழி கேள்வி-பதில் போது அவர் கூறினார்.

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத்தைத் தடுப்பதற்கும் சமாளிப்பதற்கும் டிபிகேஎல்லின் நடவடிக்கைகள் மற்றும் 2014 ஆம் ஆண்டு முதல் அது அங்கீகரித்துள்ள வளர்ச்சித் திட்டங்களின் பட்டியலைப் பற்றி கேட்ட தெரசா கோக்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset