நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்த கட்டண விகிதத்தை கொண்ட பட்டப் படிப்புகளுக்கான கடன் நிறுத்தப்படாது: பிடிபிடிஎன்

கோலாலம்பூர்:

குறைந்த கட்டண விகிதத்தை கொண்ட பட்டப் படிப்புகளுக்கான கடன்களை பிடிபிடிஎன் நிறுத்தாது.

பிடிபிடிஎன் தலைவர் நோர்லிசா அப்துல் ரஹிம் இதனை தெரிவித்தார்.

தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான பிடிபிடிஎன் தனது மாணவர்களிடையே குறைந்த திருப்பிச் செலுத்தும் விகிதங்களைப் பதிவு செய்யும் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்தும் திட்டம் எதையும் 
கொண்டிருக்கவில்லை.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி பிடிபிடிஎன் தலைமை செயல்முறை அதிகாரி  அஹ்மத் தாசுகி அப்துல் மஜித், 

30%க்கும் குறைவான திருப்பிச் செலுத்தும் விகிதங்களைக் கொண்ட பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான நிதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.

ஆனால், அவரின் முன்மொழிவு ஒரு இணையப் பட்டறையின் போது கூறியிருந்தார்.

இருப்பினும் இது குறித்து பிடிபிடிஎன் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

மேலும் அது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset