நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர்:

கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர் என்று இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சென்சேய் பிரபாகரன் கூறினார்.

13ஆவது கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் கடந்த வாரம் ஶ்ரீ கெம்பாங்கான் சௌத் சிட்டி பிளாசாவில் நடைபெற்றது.

கராத்தே விளையாட்டில் அதிகமான சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில்  கேகே சூப்பர் மார்ட் நிறுவனத்தின் முழு ஆதரவுடன் நடைபெற்ற இப்போட்டியில் வெட்ரன் உட்பட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது என்று சென்சேய் பிரபாகரன் கூறினார்.

கேகே சூப்பர் மார்ட்டின் தலைவரும் சிலாங்கூர் கேஜூ காய் கராத்தே சங்கத்தின் ஆலோசகருமான டத்தோஶ்ரீ டாக்டர் கேகே சாய் போட்டியை நிறைவு செய்து வைத்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே. சிதம்பரமும் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இக் கராத்தே போட்டியில் அனைத்து இன போட்டியாளர்களுல் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே வேளையில் கராத்தே போட்டியின் வாயிலாக பல சாதனையாளர்களை உருவாக்கி வரும் சிலாங்கூர் கேஜூ காய் கராத்தே சங்கத்திற்கும் எனது பாராட்டுகள் என்று டத்தோஶ்ரீ டாக்டர் கேகே சாய் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset