நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்: அயோப் கான்

கோலாலம்பூர்:

கடந்த செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்.

தேசிய போலிஸ் படையின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இதனை கூறினார்.

கையூட்டு பெறுவதுடம் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் சந்தேகத்தின் பேரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 45 போலிஸ் அதிகாரிகள்  எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே காலப்பகுதியில் 40 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலும் புக்கிட் அமானின் ஒருமைப்பாடு, தரநிலைகள் இணங்குதல் துறை 1,557 ஒழுங்கு விசாரணை ஆவணங்களையும், விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்படும்  அதிகாரிகளுக்கு எதிராக 1,118 ஒழுங்கு விசாரணை ஆவணங்களையும் திறந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset