நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 6 வகைத் தவளைகளுக்கு அவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் அறிவியல் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மற்ற 20 வகைத் தவளைகளின் உருவ அடையாளத்தைக் கண்டறியும் பணி தொடர்வதாகக் கூறப்பட்டது.

ஊர்வன, நில, நீர்வாழ் உயிரினங்களைப் பற்றி ஆகஸ்ட் மாதம் சரவாக்கில் நடைபெற்ற 10-ஆம் உலக மாநாட்டிற்குப் பிறகு அந்தப் புதிய வகைத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள முதலைகளை நிர்வகிக்கும் முயற்சியில் சரவாக்கின் வன அமைப்பு ஆஸ்திரேலியாவின் WMI அமைப்புடன் சேர்ந்து பணியாற்றும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சரவாக்கின் 22 ஆறுகளில் சுமார் 25,000 முதலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset