நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

மடானி அரசாங்கம் ஆட்சியமைத்து இராண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

அரசாங்கத்தின் செயல்பாடு குறித்த பெர்சேவின் அண்மைய மதிப்பீடு ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று பிரதமர் கூறினார்.

மேலும், எதிர்க்காலத்தில் மடானி அரசாங்கம் அதன் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

மடானி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட டி மதிப்பெண் யூபிஎஸ்ஆர் தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பீடு போன்றது. 

அடுத்த முறை எஸ்பிஎம் தேர்வில் 'A' பெறலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பெர்சே அதன் இடைக்கால மதிப்பீட்டில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நிர்வாகத்திற்கு "D" மதிப்பீட்டை வழங்கியது. 

இதில் மோசமான செயல்திறன் கூட்டணி அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க நிறுவன சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதே காரணம் என்று கூறப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset