நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

ஐந்து நாடுகளுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் செலவுகளைத் திறமையாக நிர்வகிக்கப்படுவதைத் தாம் எப்போதும் உறுதி செய்வதாகவும் அன்வார் குறிப்பிட்டார். 

நாட்டில் வணிகம் மற்றும் முதலீட்டு நலன்களைக் கொண்ட நிறுவனங்கள் தனது பயணச் செலவுகளுக்கு நிதியளிக்க உதவுகின்றன என்று அவர் கூறினார்.

பெட்ரோனாஸ், சஃபுரா எனர்ஜி, யின்சன், புரோட்டான் மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் தனது ஐந்து நாடுகளுக்கான அதிகாரப்பூர்வப் பயணச் செலவை ஏற்றுக் கொண்டதைப் பிரதமர் உறுதிப்படுத்தினார். 

எனவே, விமானச் செலவில் சுமார் 70, 80 சதவிகிதம் முதலீட்டு வணிக நலன்களைக் கொண்ட நிறுவனங்களால் ஏற்கப்படுகிறது என்பது தவறல்ல. 

இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இந்த நிறுவனங்களுக்கு உதவுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset