நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப் 

கோலாலம்பூர்: 

முறையான போக்குவரத்து அமைப்பின் வாயிலாக முதலீடு, வர்த்தகம், கட்டுமானம் ஆகிய துறைகளை வலுபடுத்த இயலும் என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் கூறினார். 

இதன் மூலம் ஆசியானின் பொருளாதாரமும் உயரும் என்று அவர் தெரிவித்தார். 

ஆசியான் போக்குவரத்து துறையை மேம்படுத்துவதன் வாயிலாக உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

இந்நடவடிக்கை பொருட்கள், சேவைகளின் திறமையான போக்குவரத்து பொருளாதார வளர்ச்சிக்கும், பின்னர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். 

இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும்,என்று 30-ஆவது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஃபடில்லா செய்தியாளர்களிடம் கூறினார்.

பல ஆண்டுகளாகப் போக்குவரத்துத் துறையில், குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கட்டமைப்பின் அடிப்படையில் இப்பகுதி பல மைல்கற்களை எட்டியுள்ளது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset