நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க நியாயமான ஊதியத்துடன் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்: குணராஜ்

ஷாஆலம்:

அந்நியத் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க நியாயமான ஊதியத்துடன் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு  மலேசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக நியாயமான ஊதியம்,  வேலை நிலைமை, சலுகைகள் மூலம் முன்னுரிமை வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த முன்னுரிமை வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல, உள்ளூர் பணியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் முக்கியமானது.

பெட்ரோல் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் அறிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த முடிவு வளர்ந்து வரும் தொழில்துறையின் தேவைகளை பிரதிபலிக்கிறது.

ஆனால் மலேசியர்களுக்கான முன்னுரிமையை நாம் புறக்கணிக்க முடியாது. 

மிகக் குறைவான ஊதியங்கள் உள்ளூர் தொழிலாளர்களை ஈர்க்காது.

மேலும் இது குறைந்த வருவாயை சார்ந்திருக்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கான கதவைத் திறக்கும் என்று அவர் கூறினார்.

பெட்ரோல் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களை முகவர் மூலமாக எடுக்கப்படாமல், நிலைய இயக்க நிறுவனத்தால் நேரடியாக வேலைக்கு அமர்த்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையும் பாராட்டுக்குரியது.

இதன் மூலம் தங்களை வேலை வாய்ப்பு முகவர்கள் என்று அழைக்கும் நேர்மையற்ற இடைத்தரகர்களின் சுரண்டலை அகற்ற முடியும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset