நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் ஆட்சிக்கு பெர்சே டி கொடுத்தது மக்களாக இருந்தால் இ கொடுத்திருப்பார்கள்: ஷாஹிடான்

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தின் ஆட்சிக்கு நல்ல வேளையாக பெர்சே டி மதிப்பீடு கொடுத்தது.

மக்களாக இருந்தால் இ மதிப்பீடு தான் கொடுத்திருப்பார்கள் என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நிர்வாகம் உள்நாடு, அனைத்துலக அளவில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இன்றைய அரசாங்கத்தை காட்டிலும் கடந்த ஆட்சிக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது நாம் எதிர்க்கட்சியாக மாறி விட்டோம். இதனால் நமக்கு டி மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டால் வருத்தப்பட்டாலும் நாம் தொடர்ந்து சுவாசிக்கலாம்.

ஆனால் இந்நிலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என டத்தோஶ்ரீ ஷாஹிடான் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset