நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, அது ஒரு கடமை: டத்தோஶ்ரீ சரவணன்

தஞ்சோங் மாலிம் -

ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, அது ஒரு கடமை என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.

வருங்கால ஆசிரியர்களுடன் ஓர் இலக்கியப் பகிர்வு எனும் மனதிற்கு இதமான நிகழ்ச்சி உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்றதில் மகிழ்ச்சி.

ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது ஒரு கடமை, சேவை எனும் அடிப்படை மனநிலை இருந்தால் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

ஆசிரியர்களாகக் கால் பதிக்கவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்ப் பேராயம் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து, எழுதிய மகா கவிதை, மரபின் மைந்தன் முத்தையாவின் அன்புள்ள ஆசிரியர்களே, பழகிப் பார்த்ததில் இவர்கள் எனும் நூல்களை இலவசமாக வழங்கப்பட்டது.

நாளைய உலகைப் பெருமளவில் ஆக்கிரமிக்கப்போவது  செயற்கை நுண்ணறிவே. எனவே அதுபற்றிய அடிப்படைகளை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு 

கற்க கற்க அறிவு பெருகும்.

கற்றுக்கொடுப்பவர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல, தொடர்ச்சியாகக் கற்பவர்கள் தான் சிறந்த நல்லாசிரியர்களாக வலம் வர முடியும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset