செய்திகள் மலேசியா
துன் டாய்ம்க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத் துறை தலைவர், எம்ஏசிசி தலைமை இயக்குநர் பதிலளிக்க வேண்டும்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
துன் டாய்ம்க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத் துறை தலைவர், எம்ஏசிசி தலைமை இயக்குநர் பதிலளிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமத் இதனை வலியுறுத்தினார்.
முன்னாள் நிதியமைச்சரான துன் டாய்ம் ஜைனுடின் கடந்த நவம்பர் 13ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் துன் டாய்ம்க்கு எதிரான வழக்கை ரத்து செய்வதை நான் ஏற்கப்போவது இல்லை.
அதற்கு பதிலாக அவர் மக்களின் பணத்தை திருடியது உண்மையா என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.
சட்டத்துறை தலைவர் முஹம்மத் டுசுகி மொக்தார், எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று துன் மகாதீர் கூறினார்.
முன்னதாக துணை அரசு வழக்கறிஞரின் கோரிக்கையைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 254(3) இன் கீழ் சொத்துக்களை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டில் இருந்து துன் டாயிமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm
ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார்
November 21, 2024, 1:10 pm
சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு
November 21, 2024, 11:05 am
முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப்
November 21, 2024, 10:01 am
செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்: அயோப் கான்
November 21, 2024, 9:46 am
குறைந்த கட்டண விகிதத்தை கொண்ட பட்டப் படிப்புகளுக்கான கடன் நிறுத்தப்படாது: பிடிபிடிஎன்
November 20, 2024, 6:12 pm