நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் ஆலயங்களுக்கு வழங்கப்படும்  மானியத்திற்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை: பாப்பாராய்டு  

ஷா ஆலம்:

இந்து ஆலயங்களுக்கு வழங்கப்படும் சிலாங்கூர் மாநில அரசின் மானியத்திற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மாறாக, ஆலயங்களின் பரப்பளவு, மறுசீரமைப்பு, பராமரிப்பு, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் நிதி நிலை மற்றும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மானியத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்படுவதாக மனித வளம், வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சுங்கை ராமால் தேசியக் கூட்டணி உறுப்பினர் முஹம்மது ஷாபி நகா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்து ஆலயங்களுக்கு மாநில அரசு எத்தகைய உதவிகளை வழங்கி வருகிறது? எந்த வகையில் உதவிகள் வழங்கப்படுகின்றன?, ரொக்க உதவியாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் வழங்கப்படும் தொகை எவ்வளவு? என்று முஹம்மது ஷாபி
கேள்வியெழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த பாப்பராய்டு, லீமாஸ் என அழைக்கப்படும் பௌத்த, கிருஸ்துவ, இந்து, சீக்கிய, தாவ் சமயங்களுக்கான சிறப்பு செயல் குழுவின் ஆலோசனையின் வாயிலாக இந்து ஆலயங்கள், இஸ்லாம் அல்லாத இதர வழிபாட்டுத் தலங்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக விவரித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்காக கொண்ட இந்த லீமாஸ் சிறப்பு செயல்குழு, நில, கனிம்வள இலாகா, நில மற்றும் மாவட்ட அலுவலகம், ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset